Saturday, 27 November 2010

பூணில் நஞ்சேற்றி , நாணில் நெஞ்சேற்றி பூசை செய்த தெய்வங்கள்! - ஜெய் தரன்

பூணில் நஞ்சேற்றி கருவறையில் தமிழ்த்தாய்க்கு பூசை செய்த தெய்வங்கள்!
நாணில் நெஞ்சேற்றி பகைவன் பாசறை பாய்ந்த உணர்வில் செய்த உயிரம்புகள்!


கோனின் நெறியில் கொடியோர் கோட்டை புகுந்து அந்தமில்லா ஒளி பிளம்பாநீர்!
வேனில் வயதில் விடுதலை வேண்டி நீர் வேறெதுவும் கொள்ளாமல் சருகாநீர்!


சாணில் கூட ஒரு இடம் கேட்கவில்லை சாய்ந்தீர் சந்நிதானத்தில் வைப்பேன் திலங்க!
வானில் விண்மீனாய் தமிழ் நெஞ்சம் நிறைந்தீர் , கல்லறை உடைத்த வெறியர் கலங்க!

மாணில் வரை மயங்காமல் மண் மானம் பெரிது எமக்குரைத்தீர் வீழ்ந்தும் எழுவோம்!
மானில் நீர் கவரி போல் கண் முன்னே வாழ்ந்து சென்றீர், உம பயணம் தொடர்வோம்!


யானில் லை ! இவ்வுயிரும் எமினத்தின் இவ்விருப்பும் நீர் தந்த வரம் என்று நாமறிவோம்!
 வீணில் செல்லா உம் தியாகம் , தாயகம் மீட்கும் வரை மீண்டும் மீண்டும் எழுகின்றோம்!






தேனில் நனையும் மாந்தையும் மீன் கனைக்கும் கீழையும் நாம் ஆளும் நாள் வரும் இனி!

தூணில் துரும்பில் என பாரெங்கும் ஒலிக்கும் சுதந்திர தாகம் அடக்கும் சிங்கள வெறிமுனி !

No comments:

Post a Comment